மாமியார் சீக்கிரம் சாகணும்.. 20 ரூபாய் நோட்டில் வேண்டுதல்.. கோயிலில் பரபரப்பு!

சில நேரங்களில் விளையாட்டாக சில நபர்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகள், வெற்று காகித தாள்கள், வேண்டுதல் வைத்த குறிப்புகள் என சிலவற்றை உண்டியலில் போடுவார்கள். ஆனால் இப்படி ஒருவர் சீக்கிரம் இறக்க வேண்டும் என போட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்

கர்நாடகாவில் கோயில் உண்டியல் எண்ணும் பணியின் போது நடைபெற்ற சம்பவம் ஒன்றும் மிகப்பெரிய அளவில் பேசுப் பொருளாக மாறி உள்ளது. ஆன்மீக பூமியான இந்தியாவில் திரும்பவும் திசையெங்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்த வழிபாட்டுத்தலங்கள் நிறைந்து கிடைக்கிறது. இங்கு உள்ளூர் முதல் உலகம் வரையிலான மக்கள் வந்து செல்லும் நிலையில் சில வழிபாட்டுத் தலங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்து வருகிறது. இத்தகைய வழிபாட்டு தலங்களில் வைக்கப்படும் உண்டியல்களில் பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்ட காணிக்கைகளை பணமாகவோ அல்லது நகைகளாகவோ செலுத்துவது வழக்கம். ஒவ்வொரு கோயில்களிலும் அதன் பரப்பளவை பொறுத்து ஒவ்வொரு சன்னதிக்கும், பிரகாரத்துக்கும் உண்டியலானது வைக்கப்படுகிறது. இந்த காணிக்கைகள் கோயில் பராமரிப்புக்காக மட்டுமின்றி அன்னதானம் போன்ற பல்வேறு விஷயங்களுக்காகவும்  பயன்படுத்தப்படுகிறது.

இப்படியான நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோயில் ஒன்றில் உண்டியல் என்னும் பணியின் போது கிடைத்த ரூபாய் நோட்டு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என்ன நடந்தது?

அங்குள்ள கல்புர்கி மாவட்டத்தை அடுத்துள்ள கதர்கா என்ற கிராமத்தில் பாக்கியனாவதி என அழைக்கப்படும் கோயில் உள்ளது. சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலமான இந்த கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு பக்தர்கள் தங்கள் வேண்டிக் கொண்டது நிறைவேறியவுடன் இந்த கோயிலுக்கு வந்து காணிக்கைகள் செலுத்துவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த உண்டியல் காணிக்கைகள் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இப்படியாக நேற்று கோயில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் உண்டியல் பணத்தை எண்ணுவதற்காக அதனை திறந்து உள்ளனர். பின்னர் ரூபாய் நோட்டுகளை தனியாக எடுத்து அதில் செல்லாத நோட்டுக்களை பிரித்துள்ளனர்.

அப்போது ஒரு இருபது ரூபாய் நோட்டில் ஏதோ ஒரு வாசகம் எழுதப்பட்டிருப்பதை ஊழியர் படித்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் கடவுளே என் மாமியார் சீக்கிரமாக மரணிக்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. இதனைக் கண்டு  அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த இருபது ரூபாய் நோட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பொதுவாக கோயிலுக்கு சென்றால் உடல் ஆரோக்கியம், தொழில் வளர்ச்சி, செல்வ வளம், உத்தியோகத்தில் பணி உயர்வு என பலவிதமான வேண்டுதல்களை வைத்து கடவுளிடம் முறையிடுவார்கள். மேலும் அந்த வேண்டுதல்கள் விரைந்து நிறைவேற விரதம் இருப்பது, அழகு குத்துவது, காவடி எடுப்பது, அன்னதானம் செய்வது, கோயிலுக்கு பொருட்கள் வாங்கி கொடுப்பது, நன்கொடை அளிப்பது என பல்வேறு விதமான முறைகளை கையாளுவார்கள்.

ஆனால் ஒருவர் மரணிக்க வேண்டும் என ரூபாய் நோட்டில் எழுதி உண்டியலில் போடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது. இந்த ரூபாய் நோட்டை விளையாட்டாக எழுதி உண்டியலில் போட்டாரா, அல்லது உண்மையிலேயே வேண்டுதல் வைத்தாரா என்பது தெரியவில்லை. எப்படி இப்படி மனம் உள்ளவர்களால் கோயிலுக்குள் நிம்மதியாக வர முடிகிறது என இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು