திருவண்ணாமலையில் பரபரப்பு.. பூட்டிய அறைக்குள் 4 பேர் சடலம்!

4 people mysteriously die in Tiruvannamalai: திருவண்ணாமலையில் பூட்டிய அறைக்குள் 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவண்ணாமலையில் 4 பேர் மரணம்: திருவண்ணாமலையில் உள்ள தனியார் விடுதியில், 4 பேர் விடுதி எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள், மாலை 6 மணியளவில் மீண்டும் ஒருநாள் தங்கவுள்ளதாக விடுதி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர். இது டிச.27, 2024 மாலை 6 மணிக்கு நடந்துள்ளது. அதன்பின்னர், அந்த அறை மறுநாள் வரை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின் பேரில் காவலர்கள் சம்பந்தப்பட்ட விடுதியில் சோதனை நடத்தினார்கள். அப்போது, பூட்டிய அறைக்குள் அந்த நால்வரும் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

சென்னையை சேர்ந்த பெண்..

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதாவது, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ருக்மணி (45) அவரது குழந்தைகள் ஜலந்தாரி (17) மற்றும் ஆகாஷ் குமார் எனத் தெரியவந்தது.
இவர்கள் மூன்று பேரும் ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், ருக்மணி கணவரை விவாகரத்து செய்து பிரிந்தவர் ஆவார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு மகா காலா வியாசர் (40) என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

ஆன்மிக விடுதலை

இவரும் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நால்வரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இதற்கிடையில் போலீசார் தற்கொலைக்கான காரணம் அடங்கிய கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
அதில், ஆன்மிகத்தில் ஏற்பட்ட அதீத நம்பிக்கை இவர்களுக்கு மூட நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்கம் காரணமாக ஆன்மிக விடுதலை என்ற மூட நம்பிக்கையின் பேரில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

போலீஸ் தீவிர விசாரணை

இவர்கள் ஏற்கனவே கார்த்திகை தீப திருநாளில் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளனர். அங்கு தரிசனம் முடித்துவிட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் டிச.27ஆம் தேதி ஆன்மிக பயணமாக திருவண்ணாமலை சென்றுள்ளனர். அங்கு இறைவனை தரிசித்து விட்டு, அவரிடமே ஐக்கியமாக முடிவெடுத்துள்ளனர். அதன்படி இந்தத் தற்கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையில் 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು