Tamil Nadu Goverment Jobs : 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… உள்ளூரிலேயே அரசு வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்

ராமநாதபுரம் மாவட்ட மருத்துவமனையில் மொத்தம் 16 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஆடியோலஜிஸ்ட் மற்றும் சிகிச்சையாளர், லேப் டெக்னீஷியன், பல் மருத்துவ டெக்னீஷியன் ஆகிய பணிகளுக்கு தலா ஒரு இடங்களும், லேப் டெக்னீஷியன் கிரேடு 2 பணிக்கு 12 இடங்களும், பல்நோக்கு மருத்துவ உதவியாளர் பணிக்கு 1 இடங்களும் நிரப்பப்படுகிறது.

கல்வித்தகுதி

Audiologist and speech therapist பணிக்கு ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சை முடித்திருக்க வேண்டும். லேப் டெக்னீஷியன் பணிக்கு மெடிக்கல் லேப் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும். பல் மருத்துவ டெக்னீஷியன் பணிக்கு பல் மருந்து டெக்னீஷியன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். லேப் டெக்னீஷியன் கிரேடு 2 பணிக்கு மெடிக்கல் லேப் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவ உதவியாளர் பணிக்கு 8ஆம் தேதி வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது விவரம்

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

Audiologist and speech therapist பணிக்கு மாத சம்பளமாக ரூ.23,000, லேப் டெக்னீஷியன் பணிக்கு ரூ.13,000, பல் மருத்துவ டெக்னீஷியன் பணிக்கு ரூ.12,000, லேப் டெக்னீஷியன் கிரேடு 2 பணிக்கு ரூ.15,000, பல்நோக்கு மருத்துவ உதவியாளர் பணிக்கு ரூ.8,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணிகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எனவும் வரும் காலங்களில் பணிவரன் முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் உரிய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். ஜனவரி 9 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು