நீங்க 10ம் கிளாஸ் பாஸா? ரூ.7 ஆயிரம் சம்பளம்.. எல்.ஐ.சி.யில் காத்திருக்கும் வாய்ப்பு!

பத்தாம் வகுப்பு படித்த மகளிருக்கு எல்.ஐ.சி.யில் சிறப்பு திட்டம் ஒன்று உள்ளது. இந்தத் திட்டத்தில் மகளிருக்கு மாதச் சம்பளமாக ரூ.7 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி பீமா சகி யோஜனா: இந்திய ஆயுள் காப்பீடு கழகம் சமீபத்தில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் 10ஆம் வகுப்பு முடித்துள்ள மகளிர் விண்ணப்பிக்கலாம். இதில் மாதச் சம்பளமாக ரூ.7 ஆயிரம் வழங்கப்படும். இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இங்கு விடை காணலாம்.

கல்வி மற்றும் வயது தகுதி

எல்.ஐ.சி. பீமா சகி திட்டத்தில், 10 ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 70 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்காக இந்தத் திட்டம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஒருவரின் நிதி அறிவை மேம்படுத்தவும், காப்பீட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும் இந்தத் திட்டம் உதவும் என்று அரசு நம்புகிறது.
இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மகளிர் முதலில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெறுவார்கள். மூன்று வருட பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் முழுத் தகுதி வாய்ந்த முகவர்களாக மாறுகிறார்கள்.

எனினும், அவர்கள் எல்.ஐ.சி.யின் நிலையான ஊழியர்கள் அல்ல. இவர்களுக்கு நிலையான ஊழியர்களின் எவ்வித நலன்களும் கிடைக்காது. எனினும் சில நிதி பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சம்பளம் எப்படி வழங்கப்படும்?

பீமா சகி திட்டத்தில் தேர்வான பெண்களுக்கு மூன்று வருட பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
அதன்படி முதல் ஆண்டு ரூ.7 ஆயிரமும், இரண்டாம் ஆண்டு ரூ.6 ஆயிரமும், மூன்றாம் ஆண்டு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

  • எல்.ஐ.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழையவும்.
    ஹோம் பக்கத்தில் உள்ள பீமா சகி என்பதை கிளிக் செய்யவும்.
  • எல்.ஐ.சி பீமா சகி பக்கம் திறந்த உடன், அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை அளிக்கவும். சரியான பெயர், செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை சரியாக பதிவிடவும்.
  • எந்தவொரு எல்ஐசி முகவர், மேம்பாட்டு அதிகாரி, பணியாளர் அல்லது மருத்துவப் பரிசோதகர் மூலமாக உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதாக இருந்தால், நீங்கள் அவர்களின் தகவலை வழங்க வேண்டும்.
  • கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி பொத்தானை அழுத்தவும்.
  • உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும்.
  • எதிர்கால தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். நாடு முழுக்க மக்களிடைய காப்பீடு மற்றும் காப்பீட்டின் பலன்கள் குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು