தீவிரவாத தாக்குதல் தொடர்பாக மும்பை காவல்துறை வெளியிட்ட குற்றப்பத்திரிக்கையில் தாஹாவூர் ராணா பெயர் சேர்த்திருந்தது. தொடர்ந்து, பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐஎஸ்ஐ மற்றும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் -இ- தொய்பாவில் உறுப்பினராகவும் தாஹாவூர் ராணா இருந்துள்ளார்.
மும்பை தாக்குதலில் (26/11) குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரலாம் என்று கூறப்படுகிறது. இந்தியா – அமெரிக்கா நாடு கடத்தல் ஒப்பந்ததின்கீழ் ராணாவை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ராஜதந்திர வழிகளில் ராணாவை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ் தாஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என தீர்ப்பளித்தது.
நிராகரித்த அமெரிக்க நீதிமன்றம்:
மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுப்பட்டதற்காக தாஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ராணா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. மேலும் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து, தாஹாவூர் ராணாவுக்கு எதிராக போதுமான ஆதாரத்தை இந்தியா சமர்ப்பித்துள்ளதாகவும், இது நாடு கடத்தலுக்கு போதுமானது என்றும் தெரிவித்தது.
26/11 மும்பை தாக்குதல்:
26/11 தீவிரவாத தாக்குதல் தொடர்பாக மும்பை காவல்துறை வெளியிட்ட குற்றப்பத்திரிக்கையில் தாஹாவூர் ராணா பெயர் சேர்த்திருந்தது. தொடர்ந்து, பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐஎஸ்ஐ மற்றும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் -இ- தொய்பாவில் உறுப்பினராகவும் தாஹாவூர் ராணா இருந்துள்ளார் என குறிப்பிட்டு இருந்தது. அந்த குற்றப்பத்திரிகையில், தாஹாவூர் ராணா 26/11 பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்த டேவிட் கோல்மன் ஹெட்லிக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. மும்பையில் தாக்குதல் நடத்தப்படும் இடங்களை ராணவே, ஆய்வு செய்து அதற்கான வரைபடத்தை தயாரித்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கொடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
யார் இந்த தாஹாவூர் ராணா..?
தாஹாவூர் ராணா என்பவர் தாவூத் சயீத் கிலானி என்ற டேவிட் கோல்மன் ஹெட்லியின் பால்ய நண்பர் என்று கூறப்படுகிறது. ஹெட்லி ஒரு பாகிஸ்தான் வாழ் அமெரிக்க குடிமகன். கடந்த 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பிறகு, கடந்த 2009ம் ஆண்டு ஹெட்லியை சிகாகோவில் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். இதை தொடர்ந்து, நடந்த விசாரணையில், மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக கூறி ஹெட்லிக்கு 2013ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறைத் தண்டை விதித்தது. தாஹாவூர் ராணாவும், ஹெட்லியும் பாகிஸ்தானில் உள்ள ஹசன் அப்தல் கேடட் பள்ளியில் 5 ஆண்டுகள் ஒன்றாக படித்தனர்.
பாகிஸ்தான் இராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்த தாஹாவூர் ராணா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கனடாவுக்கு குடியேறினார். சில ஆண்டுகளுக்கு பிறகு கனடாவில் குடியுரிமையை பெற்ற அவர், சிகாகோவில் ஒரு ஆலோசனை நிறுவனத்தை நிறுவினார். அந்த நிறுவனத்தின் கிளை ஒன்று மும்பையிலும் இருந்தது. இதன் மூலமாகவே, மும்பை தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Author: VS NEWS DESK
pradeep blr