உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஏலக்காய் சாப்பிடுவது நன்மை பயக்கும். ஆயுர்வேதத்தின் படி, ஏலக்காயை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய சமையலறைகளில் உள்ள மசாலா பொருட்களில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த மசாலா பொருட்கள் உணவுக்கு தேவையான சுவையை கொடுப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் தருகிறது. பிற மசாலா பொருட்களை போன்று ஏலக்காயும் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏலக்காயை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் உடலில் பல மாற்றங்களை உணர முடியும். இதன் காரணமாகவே, பலரும் தினமும் குடிக்கும் டீ போன்றவற்றில் ஏலக்காயை பயன்படுத்துகின்றன. இவை உடலுக்கு மட்டுமல்லாமல், மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஏலக்காய் சாப்பிடுவது நன்மை பயக்கும். ஆயுர்வேதத்தின் படி, ஏலக்காயை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் தினமும் இரவு உணவிற்குப் பிறகு அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன் 2 முதல் 3 ஏலக்காய்களை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.
தினமும் ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
- இரவில் தூங்குவதற்கு முன் ஏலக்காய் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த பெரிதும் உதவி செய்யும். உங்களுக்கு அடிக்கடி அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்றால், இரவில் தூங்குவதற்கு முன் 2 ஏலக்காயை சாப்பிடுவது சிறந்த பலனை தரும்.
- இரவில் திடீரென்று எழுந்தால், மீண்டும் தூங்க செல்வதற்கு முன் 2 முதல் 3 ஏலக்காயை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்க உதவு செய்யும். ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதால் இரவில் நிம்மதியாக தூங்க உதவுகிறது.
- இரவில் படுக்கும் முன் ஏலக்காய் சாப்பிடுவது காலையில் உங்கள் உடலை நச்சுத்தன்மையாக்கி, நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
- இரவில் படுக்கும் முன் ஏலக்காய் சாப்பிடுவது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனுடன் ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் வாயு, அமிலத்தன்மை, வயிற்று வலி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகிறது.
- ஏலக்காயில் உள்ள பண்புகள் உங்கள் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளை நீக்கவும் உதவி செய்யும்.
- ஏலக்காய் சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் ஏலக்காயை எடுத்துக்கொண்டால், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவி செய்யும்.
- ஏலக்காயில் உள்ள பாக்டீரியாக்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி எந்த விதமான தொற்று நோயும் வராமல் தடுக்கிறது.
- ஏலக்காயை உட்கொள்வது உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க உதவி செய்து, மன அழுத்தத்தை குறைக்கிறது. மனதிற்கு புத்துணர்ச்சியை தரும்.
Author: VS NEWS DESK
pradeep blr