புத்தாண்டில் புகுந்த திருடர்கள்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி.. தப்பிய நகை, பணம்..!

டிசம்பர் 31ம் தேதி இரவு 11.45 மணியளவில் மர்ம நபர்கள் 2 பேர் கைகளில் கையுறை அணிந்தபடி, வீட்டிற்குள் நுழைந்ததை கொண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இவர்களின் வயது 30 முதல் 40க்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வீடு ஒன்றில் கதவை உடைத்து கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர். அப்போது வெளிநாட்டில் இருந்தபடி, சிசிடிவியில் பார்த்த வீட்டின் உரிமையாளர் பக்கத்து வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, தவலறிந்து வந்த அக்கம்பக்கத்தினர் கொள்ளையர்கள் இருந்த வீட்டின் முன்பு நின்று திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளனர். அப்பகுதி மக்களின் சத்தத்தை கேட்டு கொள்ளையர்கள் சுவர் ஏறி குதித்து ஓடியதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது.?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டார் பகுதியில் 58 வயதான சலீம் என்ற தொழிலதிபர் வீடு உள்ளது. இவரது மகன் மஸ்கட்டில் இருப்பதால், மகனை பார்க்கவும் புத்தாண்டை கொண்டாடவும் கடந்த வாரம் சலீம் தனது குடும்பத்துடன் மஸ்கட் சென்றுள்ளார். யாரும் இல்லாத நேரத்தில் வீட்டை கண்காணிக்க வீட்டை சுற்றி சிசிடிவி கேமாராக்களை பொருத்தி இருக்கிறார். இதிலிருந்து வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வுகளை சலீம் தனது செல்போன் மற்றும் லேப்டாப் மூலம் பார்க்க முடியும்.

இந்தநிலையில், நேற்று முன் தினம் இரவு நேரத்தில் மஸ்கட்டில் உள்ள தனது மகன் வீட்டில் இருந்தபடியே எதார்த்தமாக வீட்டில் என்ன நடக்கிறது என்று சலீம் பார்த்துள்ளார். அப்போது, டிசம்பர் 31ம் தேதி இரவு 11.45 மணியளவில் மர்ம நபர்கள் 2 பேர் கைகளில் கையுறை அணிந்தபடி, வீட்டிற்குள் நுழைந்ததை கொண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இவர்களின் வயது 30 முதல் 40க்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

உள்ளே நுழைந்த இருவரும் தாங்கள் கைகளில் கொண்டு வந்த பெரிய இரும்பு கம்பியை வைத்து வீட்டில் இருந்த ஒவ்வொரு அறையின் கதவுகளை உடைக்க முயற்சித்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சலீம் உடனடியாக தனது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு செல்போன் மூலம் அழைத்து நடந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். நல்லவேளையாக அனைவரும் புத்தாண்டை கொண்டாட காத்திருந்ததால், உடனடியாக போனை எடுத்து விஷயத்தை அறிந்து கொண்டனர்.

பக்கத்து வீட்டுக்காரர் அங்கிருந்த அக்கம்பக்கத்தினரிடம் நடந்த விஷயத்தை எடுத்துக்கூறி சலீம் வீட்டு முன்பு கூடினர். தொடர்ந்து, சலீம் வீட்டு முன்பு நின்றபடியே திருடன் திருடன் என சத்தமாக கத்தியுள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் உடனடியாக வீட்டின் பின்பக்கம் வந்த வழியே சென்று சுவர் ஏறி குதித்து அங்கிருந்து தப்பி ஓடினர். சிசிடிவி காட்சிகள் வழியாக பார்த்தபோது கொள்ளையர்கள் கையில் ஆயுதங்கள் இருந்ததால், அப்பகுதி மக்கள் யாரும் அருகில் செல்லவில்லை.

அப்போது, ஒரு சிலர் காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த கோட்டார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சலீம் தனது வீட்டில் வைத்துள்ள சிசிடிவி காட்சிகளை சரியாக ஆராய்ந்து பக்கத்து வீட்டிற்கு தகவல் கொடுத்ததால், வீட்டில் இருந்த பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் தப்பியது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು