பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகிய விடாமுயற்சி… வரிசைக்கட்டும் படங்கள்

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படம் பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்று படக்குழுவினர் அறிவித்துவிட்டார்கள். இதனை தொடர்ந்து பல்வேறு படங்கள் பொங்கல் வெளியீட்டை தற்போது உறுதிச் செய்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் வெளியீடு பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகியதால் மற்ற நடிகர்களின் படங்களை பொங்கலுக்கு வெளியிடுவதாக தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. இது அஜித் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித் குமார் துணிவு படத்திற்கு பிறகு நடித்து வரும் படம் ’விடாமுயற்சி’. இந்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள நிலையில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் அஜித் உடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பணிகள் முடிவடையாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் 28-ம் தேதி ‘விடாமுயற்சி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. அதில் ”எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.

மேலும் படம் வருகின்ற 2025-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் என்றும் அந்த டீசரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து நேற்று புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 12.7 am வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரசிகர்கள் புத்தாண்டை அஜித்தின் விடாமுயற்ச்சியுடன் கொண்டாட திட்டமிட்டிருந்த நிலையில் 31-ம் தேதி இரவு 11 மணிக்கு மேல் படக்குழு குறிப்பிட நேரத்தில் படம் வெளியாகவில்லை என்று அறிவித்தது. தடங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறிய படக்குழு ட்ரெய்லர் வெளியாகும் நேரத்தை குறிப்பிட்டிருந்த எக்ஸ் தள பதிவையும் நீக்கியிருந்தது.

இந்த செய்தியை கேட்ட அஜித் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் டீசரில் ”எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு” என்று குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி தொடர்ந்து கைவிட்டுக்கொண்டே இருக்குறீங்க என்றும் கமெண்ட்ஸ்களை தெரிவிக்கவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித்தின் விடாமுயற்சி வெளியாகவில்லை என்பது தெரிந்ததும் மற்ற நடிகர்களின் படங்களை ஒன்று ஒன்றாக பொங்கல் வெளியீட்டிற்கு அறிவித்து வருகின்றது படக்குழு. அதன்படி பேப்பர் ராக்கெட் வெப்சீரிசை தொடந்து இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’.

ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வினய், லால், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், வினோதினி, பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் இருந்து முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற பொங்கல் பண்டிகை முன்னிட்டு 14-ம் தேதி வெளியாகவுள்ளது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வரிசையில் நடிகர் சிபிராஜ் நடித்துள்ள டென் ஹவர்ஸ்,  நடிகர் ஷேன் நிகாம் மற்றும் கலையரசன் நடித்துள்ள மெட்ராஸ்காரன் ஆகிய படங்கள் ஜனவரி 10ல் வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தனை படங்கள் வெளிவந்தாலும் அஜித் ரசிகர்கள் தற்போது சோகத்தில் தான் ஆழ்ந்துள்ளனர்.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು