லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: உதவிக்கு வந்தது கனடா விமானப்படை

ஒட்டாவா: அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைப்பதற்கு, அண்டை நாடான கனடா உதவுவதாக பிரதமர் பதவியில் இருந்து விலகும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
50 மாகாணங்களைக் கொண்ட அமெரிக்காவின் 51வது மாகாணமாக அண்டை நாடான கனடாவும் இணைந்து கொள்ள வேண்டும் என்று அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். ‘கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் இருக்காது; வர்த்தகப் பற்றாக்குறை இருக்காது. கனடா பாதுகாப்பாக இருக்கும்’ என்றும் அவர் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல், அமெரிக்கா, கனடா இணைந்து ஒரே நாடாக இருப்பது போன்ற வரைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, கனடா ஆட்சியாளர்களை கோபத்திற்குள்ளாக்கினார்.

அமெரிக்க அதிபரின் இந்த செயலுக்கு, அண்மையில் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி கொடுத்திருந்தார். கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்றும் திட்டத்திற்கு துளியளவும் வாய்ப்பில்லை என்றும், இரு நாடுகளும் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் பாதுகாப்பில் பங்காளிகளாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இதன்காரணமாக, கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதனிடையே, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது மேலும் மேலும் பரவியதால், லட்சக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்தக் காட்டுத்தீயை அணைக்கு முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கனடா அரசுக்கு சொந்தமான விமானம், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இரு நாடுகளும் வேறு வேறு என்பதை உணர்த்தும் விதமாக, ‘Neighbours helping neighbors’, என்பதை பிரிட்டீஷ் இங்கிலீஷ் மற்றும் அமெரிக்கன் இங்கிலீஷில் பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பதிவில், ‘கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சியில் கனடா உதவி வருகிறது. 250 விமானங்கள் ஏற்கனவே தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது எங்களின் அண்டை நாடான அமெரிக்காவுக்கு கனடாவின் உதவி’, எனக் குறிப்பிட்டுள்ளார்.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು