பிரான்சில் பிப்ரவரி 10, 11ல் பிரமாண்டமாக ஏ.ஐ., உச்சிமாநாடு; பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

பாரிஸ்: பிப்ரவரி 10, 11ம் தேதிகளில் பிரான்சில் நடைபெற உள்ள ஏ.ஐ., உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி 20 உச்சிமாநாட்டின் போது, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த வேண்டும் என இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இந்நிலையில், பிப்ரவரி 10,11ம் தேதிகளில் பிரான்சில் நடைபெற உள்ள ஏ.ஐ., உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: நாங்கள் ஏ.ஐ., உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியை அழைத்துள்ளோம். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

மாநாட்டில் அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். ‘இந்த சூழலில் பிரான்சில் வரவிருக்கும் ஏ.ஐ., உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ததற்கு, அதிபர் மேக்ரானின் முயற்சியை பிரதமர் மோடி வரவேற்றார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು