சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் அமர்ந்திருந்த ஜோடியிடம், ‘நீங்கள் கணவன்-மனைவியா’ என்று போலீஸ்காரர் கேள்வி எழுப்பினார். அவரிடம், பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை மக்களின் பிரதான பொழுதுபோக்கு மையமாக மெரினா கடற்கரை உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பேர் வந்து செல்லும் இடம் என்பதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு, கடற்கரை மணலில் அமர்ந்திருந்த ஆண் -பெண் ஜோடியிடம் சென்ற போலீஸ்காரர் ஒருவர், ‘நீங்கள் கணவன் மனைவியா, ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது அந்த ஜோடிக்கும், போலீஸ்காரருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.துவக்கத்தில் உரத்த குரலில் பேசிய போலீஸ்காரர், பதிலுக்கு அந்தப் பெண்ணும் உரத்த குரலில் கேள்விகளை எழுப்பியதால், பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார். ‘ஒரு பெண்ணும் ஆணும் பீச்சில் அமரக்கூடாதா? ஜோடியாக அமர்ந்திருந்தால் கணவன்- மனைவியா என்று கேட்பது நாகரிகமா? அப்படி எதுவும் சட்டம் இருக்கிறதா. பீச்சில் கணவன் மனைவி தான் உட்கார வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது” என்று அந்த பெண் போலீஸ்காரரிடம் கூறினார்.

Author: VS NEWS DESK
pradeep blr