பிக் பாஸ் முத்துக்குமரன் வீட்டில் விசேஷம்.. குவிந்த பிரபலங்கள்! அந்த நடிகை மிஸ்ஸிங், அது கன்ஃபார்ம் தானா?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் சொந்த ஊரில் நடந்த ஃபங்ஷனில் பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் சௌந்தர்யா மட்டும் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யாவிற்கு இடையே இருக்கும் பிரபிக் பாஸ் நிகழ்ச்சியையும் சர்ச்சையையும் பிரித்து பார்க்க முடியாது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு பஞ்சாயத்து வந்துவிடுகிறது. அது போல தான் சமீபத்தில் நடந்து முடிந்த எட்டாவது சீசனில் சௌந்தர்யாவிற்கு பி.ஆர் சப்போர்ட் செய்து அவரை வெற்றி பெற வைத்தனர், ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் சௌந்தர்யா ஜெயிப்பதற்கு காரணம் பிஆர் சப்போர்ட் தான் என்று அதிகமான குற்றச்சாட்டுகள் வந்தது.ச்சனை குறித்து சில நாட்களாக இணையத்தில் பேசப்படும் நிலையில் அது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்‌.

பிஆர் சப்போர்ட்

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் கூட இதைப்பற்றி நேரடியாக சவுந்தர்யாவிடமும், விஜய் சேதுபதியிடமும் பேசி இருந்தார்கள். ஆனால் அதற்கு விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்து இருந்தார். பிஆர் சப்போர்ட் இருந்தால் ஒரு வாரம் ஜெயிக்கலாம். ஆனால் எல்லா வாரமும் ஜெயிக்க முடியாது. குறிப்பிட்ட போட்டியாளர் பற்றிய மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்களை தான் வைரல் செய்வார்கள். ஆனால் அவர்களால் தொடர்ந்து வாக்குகள் செலுத்த முடியாது.

விஜய் சேதுபதி விளக்கம்

அதனால் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் ஏதாவது செய்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அவர்கள் ஏதோ செய்வது மக்களுக்கு பிடித்திருக்கிறது அதனால் தான் அவர்களை வாராவாரம் மக்கள் காப்பாற்றுகிறார்கள் என்று விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் இதை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

vijay tv Bigg Boss 8

முத்துக்குமரன் சொன்ன வார்த்தை

அதுபோல டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்தது பலருடைய பாராட்டை பெற்று இருந்தது. ரன்னராக வந்த சௌந்தர்யா கூட முத்துக்குமரனின் வெற்றியை சந்தோஷமாக கொண்டாடி இருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முத்துக்குமரன் ஒரு பேட்டியில் பேசும்போது சௌந்தர்யா பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதற்கு தகுதியான ஆள் கிடையாது, அதனால் தான் நான் அவரை ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்து கொண்டே இருந்தேன் என்று சொல்லி இருந்தார்.

vijay tv Bigg Boss 8

சௌந்தர்யா பதிலடி

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சௌந்தர்யா பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து சில வாரங்கள் கடந்து விட்டது ஆனாலும் என்னை சிலர் நாமினேஷன் செய்து கொண்டே இருக்கிறார்கள் என்று வருத்தமான பதிவை பகிர்ந்து இருந்தார். இதனால் இவர்கள் இருவருடைய ரசிகர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

vijay tv Bigg Boss 8

போட்டியாளர்களின் ரீயூனியன்

இப்படியான நிலையில்தான் சமீபத்தில் முத்துக்குமரன் புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்திருந்தார். அதில் தீபக் மனைவியோடு கலந்து கொண்டார். அதுபோல ஒரு சில போட்டியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து முத்துக்குமரனின் ஊரில் திருவிழா பங்க்ஷனில் பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதாவது மஞ்சரி, ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா, தீபக் மற்றும் அவருடைய மனைவி என ஒரு சிலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

vijay tv Bigg Boss 8

குறையாத வன்மம்

ஆனால் இந்த கூட்டணியில் சௌந்தர்யா மட்டும் வரவில்லை. அதனால் இவர்கள் இருவருக்குள் பஞ்சாயத்து பெருசாக தான் இருக்கிறது. அதனால் தான் வரவில்லை என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்த அசீம் வெற்றி நியாயமானது இல்லை அந்த சீசனில் விக்ரமன்தான் ஜெயித்திருக்க வேண்டும் என்று அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது, அதற்குப் பிறகு விக்ரமன் பற்றிய சில சர்ச்சையான செய்திகள் வரும்போது அசீம் விக்ரமனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மறைமுகமாக போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இப்போது எட்டாவது சீசன் போட்டியாளர்களும் நடந்து கொள்வது வேடிக்கையாக இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுக்கிறார்கள்.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು