Three-Language Policy Row: மும்மொழிக்கொள்கையை ஏற்காதவர்கள் தேச துரோகிகளா? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி

Minister Palanivel Thiagarajan: மும்மொழிக்கொள்கை கற்றுகொண்டு தோல்வி அடைந்ததை அவர்கள் ஏற்றுகொள்ள வேண்டும். அவர்கள் 3 மொழியையும் கற்றுகொள்ளவில்லை. இரண்டு மொழியையும் கற்றுகொள்ளவில்லை. ஒரு மொழியை கூட முழுதாக கற்றுகொள்ளவில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை, மார்ச் 20: தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கை (Three Language Policy) மற்றும் இரு மொழிக்கொள்கை விவகாரம் தற்போது வரை சூடுபிடித்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழக அமைச்சர்களும் தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையே போதுமானது. எதற்காக மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் (Dharmendra Pradhan), தமிழ்நாட்டை சேர்ந்த் மாணவர்கள் மூன்றாவதாக ஒருமொழியை கற்று கொண்டால் என்ன..? புதிய கல்விக் கொள்கையை ஏற்றுகொள்ளும் வரை தமிழ்நாட்டிற்கு கல்வி தொடர்பான நிதியை தர மாட்டோம் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்தநிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (Minister P.T.R. Palanivel Thiagarajan) இரட்டை மொழியில் வெற்றி பெற்றவர்களிடம் ஒரு மொழியில் தோல்வி அடைந்தவர்கள் ஏன் பாடம் எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

சென்னையில் நேற்று (19.03.2025) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மும்மொழிக்கொள்கையில் ஒரு மொழியை கூட கற்றுகொள்ளாத வடமாநிலங்கள், இரண்டு மொழி கொள்கையை கற்று வெற்றிபெற்ற எங்களிடம், உங்களுக்கு இரண்டு மொழிக்கொள்கை போதாது, மும்மொழிக்கொள்கையை கற்றுகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

தேசதுரோகிகள்:

மும்மொழிக்கொள்கை கற்றுகொண்டு தோல்வி அடைந்ததை அவர்கள் ஏற்றுகொள்ள வேண்டும். அவர்கள் 3 மொழியையும் கற்றுகொள்ளவில்லை. இரண்டு மொழியையும் கற்றுகொள்ளவில்லை. ஒரு மொழியை கூட முழுதாக கற்றுகொள்ளவில்லை. எல்லா தோல்வியும் ஒரே தோல்வி என்று பக்கெட்டுகளில் கொட்டிவிட்டு போய்விடுவார்கள் போல, நாம் எல்லாரும் இதை முழுவதும் வகுத்துபார்த்து வந்தவர்கள். நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் மும்மொழிக்கொள்கை வெற்றி பெற்றது என்பதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. ஓரளவு இருமொழிக்கொள்கையை கொண்டு வெற்றிகொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாட்டில், தோல்வி அடைந்த மாநிலங்கள் மும்மொழிக்கொள்கையை ஏற்றுகொள்ளுங்கள் என்று சொன்னால், ஏற்றுகொள்வார்களா..? எந்த அடிப்படையில் ஏற்றுகொள்வோம். இதையெல்லாம், நாம் அவர்களிடம் கூறினால் உடனே இல்லாத ஒரு நிலைமையை உருவாக்கு என்று சொல்வதுபோல் இருக்கிறது.

அவர்களது இயலாமையை மறைப்பதற்கு நம்மை எல்லாம் தேசதுரோகிகள் என்று சொல்கிறார்கள். மும்மொழிக்கொள்கையை ஏற்றுகொள்ளவிட்டால் நம்மிடம் தேசப்பற்று இல்லை, தேசதுரோகிகள் என்று கூறுவார்கள்” என்றார்.

எந்த மொழியும் திணிக்கப்படாது:

முன்னதாக, தேசிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் பள்ளி செல்லும் குழந்தைகள் கற்க வேண்டிய மூன்று மொழிகள் என்பது மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் என்றும், எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்றும் மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் நேற்று (10.03.2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು