“எங்க கணக்கு எங்களுக்கு தெரியும்” கூட்டணி குறித்து தங்கம் தென்னரசுக்கு இபிஎஸ் பதிலடி!

பட்ஜெட் கணக்கை சரியாக பாருங்கள், எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். சட்டசபையில் அதிமுகிவின் எதிர்காலத்தை நீர்த்துப்போக செய்ய யாரோ திட்டம் போடுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறிய நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, மார்ச் 21: பட்ஜெட் கணக்கை சரியாக பாருங்கள், எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025 மார்ச் 14ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் 2025-26ஆண்டுக்கான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில், 2025 மார்ச் 21ஆம் தேதியான இன்று சட்டப்பேரவை கூடியது. அப்போது பட்ஜெட் உரைக்கு தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அதோடு அதிமுக குறித்து சட்டபேரவையில் பேசி இருக்கிறார்.

“எங்க கணக்கு எங்களுக்கு தெரியும்”

அவர் பேசுகையில், “அதிமுகவுக்கான கூட்டல், கழித்தலை இங்கு போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.  ஆனால், உங்களுடைய கூட்டல் கணக்கை வேறொரு இடத்தில் உட்கார்ந்து இன்னொருவர் போட்டுக் கொண்டு இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

அதுவும் வேறு எங்கேயோ ஒருவர் உட்கார்ந்து உங்களுடைய தொண்டர்களின் எதிர்காலத்தை எல்லாம் சாணக்கிய தந்திரத்தோடு சிலர் எங்கையோ உட்கார்ந்து கணக்கை போட்டு கொண்டு இருக்கிறார்கள்.  இந்த மடிக்கணினி விவகாரத்தில் சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டதை போல, உங்களின் மடிகளில் இருக்கக் கூடிய கனத்தை பறித்து கொள்ள நினைப்பவர்களிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

தங்கம் தென்னரசுவின் பேச்சுக்கு சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பட்ஜெட் கணக்கை சரியாக பாருங்கள், எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினார்.

கூட்டணி குறித்து இபிஎஸ் பதில்

தொடர்ந்து பேசிய அவர், “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போல, எங்கள் மீது திமுக அக்கறை செலுத்த வேண்டாம். உங்கள் கணக்கை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் கணக்கை நாங்கள் பார்த்து கொள்கிறோம். ஒரே கருத்துடை ய கூட்டணி என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அப்படியென்றால் எதற்கு வெவ்வேறு கட்சிகள்? ஒரே கட்சியாகவே இருக்கலாமே?

திமுக அரசு ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் அதிமுகவின் கொள்கை மற்றும் நிலைப்பாடு. கட்சி ரீதியாக திமுக மட்டும்தான் எதிரி. வேறு யாருமே எங்களின் எதிரி கிடையாது. நான் பலமுறை சொல்லிவிட்டேன். அதிமுகவை பொறுத்தவரை கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது வேறு” என்று கூறினார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், கூட்டணி கணக்கு குறித்து அனைத்து கட்சிகளும் வியூகம் அமைத்து வருகின்றனர். குறிப்பாக, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி திட்டம் போட்டு வருகிறார்.  இவற்றை தவிர  பழைய கூட்டணி கட்சிகளுடனும் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக  அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.  அதில், அண்ணாமலையை தலைவர் பதவில் இருந்து பாஜக நீக்கம் பட்சத்தில், பாஜகவுடன் கூட கூட்டணி சேர எடப்பாடி பழனிசாமி தயங்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು