Karaikudi Murder : சிவகங்கை, மார்ச் 21: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நண்பர்களுடன் சென்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளனர்.காரைக்குடி, மார்ச் 21: சிவகங்கை, மார்ச் 21: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நண்பர்களுடன் சென்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளனர். அப்போது, நண்பர்கள் இரண்டு பேருக்கு வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப நாட்களில் தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பட்டப்பகலில் கொலை சம்பவங்கள் தினமும் நடந்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இந்த சூழலில், மீண்டும் தமிழகத்தில் ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. அதாவது, பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது.