Ajith : “குட் பேட் அக்லி டைட்டிலை சொன்னதே அஜித்தான்” – ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய தகவல்!

Adhik Ravichandran : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் முன்னணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படமானது வரும் 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பை நடிகர் அஜித்தான் தேர்ந்தெடுத்தார் என இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோவாக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar) . இவரின் நடிப்பில் இறுதியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படமானது மக்களிடையே ஓரளவு வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த இப்படமானது ஹாலிவுட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்று கூறப்படும் நிலையில், மக்களிடையே அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தினை தொடர்ந்து அஜித் நடித்து வந்த திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly) . இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் (Adhik Ravichandra) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படமானது தற்போது ரிலீசிற்கு தயாராகியுள்ள நிலையில், ப்ரோமோஷன் வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இவர்களில் ஜோடி விடாமுயற்சி படத்திலே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த படத்திலும் பேமஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் சொன்ன விஷயமானது, தற்போது இணையதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அவர் ஒரு பேட்டியில், குட் பேட் அக்லி டைட்டில் தேர்வான விஷயத்தைப் பற்றித் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டைட்டிலை நடிகர் அஜித்தான் தேர்ந்தெடுத்தார் என அவர் கூறியுள்ளார். மேலும் இந்த தகவல்கள்குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

குட் பேட் அக்லி டைட்டிலை தேர்ந்தெடுக்கக் காரணம் :

சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் இப்படத்தின் டைட்டில் குறித்தான கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலைக் கூறிய இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் ” இந்த திரைப்படத்திற்கான குட் பேட் அக்லி டைட்டிலை நடிகர் அஜித்தான் செலெக்ட் செய்தார்” என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் அஜித் இந்த படத்தில் தீனா மற்றும் பில்லா போன்ற படங்களில் நடித்திருந்த கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித்தின் ரெட் டிராகன் என்ற பெயரானது அருமையாக இருக்கும்.

அஜித்தின் புதிய கெட்டப் மற்றும் கதாபாத்திரம்

மேலும் இந்த திரைப்படத்தில் பல எமோஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது, வரும் 2025 ஏப்ரல் மாதம் அஜித்தின் ரசிகர்களுக்கு விருந்துதான் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஒவ்வொரு சீனில் நடிகர் அஜித் வரும்போதும் எப்படி இருக்கும் என்று, எனது படக்குழுவினருடன் பேசும்போது காட்சிகள் கண்முன்னே வந்து செல்லும். மேலும் அந்த காட்சிகள் அனைத்தையும் திரையில் நாங்கள் கொண்டுவருவதற்கு பெரும் முயற்சி செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் நடிகர் அஜித் குமாரைப் போல , அதிகம் மன உறுதியுடைய நபரை எங்கேயும் பார்க்கமுடியாது என அவர் கூறியுள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು