TAMIL – Vijayasangharsha news https://vsnewskannada.com news in kannada Fri, 18 Apr 2025 01:57:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://vsnewskannada.com/wp-content/uploads/2024/02/22-150x150.jpg TAMIL – Vijayasangharsha news https://vsnewskannada.com 32 32 ಮದ್ರಾಸ್ ಹೈಕೋರ್ಟ್: DMK ನಾಯಕ ಪೊನ್ಮುಡಿ ವಿರುದ್ಧ ಹಿಂದೂ ಧರ್ಮದ ಬಗೆಗೆ ದ್ವೇಷ ಭಾಷಣದ ಪ್ರಕರಣದಲ್ಲಿ ಕ್ರಮಕ್ಕೆ ಆದೇಶ https://vsnewskannada.com/archives/43922 https://vsnewskannada.com/archives/43922#respond Fri, 18 Apr 2025 01:57:03 +0000 https://www.vsnewskannada.com/?p=43922  

ಚೆನ್ನೈ: ಮದ್ರಾಸ್ ಹೈಕೋರ್ಟ್ DMK ನಾಯಕ ಮತ್ತು ತಮಿಳುನಾಡು ಸರ್ಕಾರದ ಮಾಜಿ ಮಂತ್ರಿ ಕೆ. ಪೊನ್ಮುಡಿ ವಿರುದ್ಧ ಹಿಂದೂ ಧರ್ಮದ ವಿರುದ್ಧ ದ್ವೇಷ ಭಾಷಣ ಮಾಡಿದ ಆರೋಪದ ಪ್ರಕರಣವನ್ನು ಪುನಃ ತೆರೆಯುವ ಮೂಲಕ, ಪೊಲೀಸರಿಗೆ ಸೂಕ್ತ ಕ್ರಮ ತೆಗೆದುಕೊಳ್ಳುವಂತೆ ಆದೇಶಿಸಿದೆ. ಹೈಕೋರ್ಟ್, “ಪೊಲೀಸರು ಕ್ರಮ ತೆಗೆದುಕೊಳ್ಳದಿದ್ದರೆ, ನಾವೇ ಕ್ರಮ ತೆಗೆದುಕೊಳ್ಳುತ್ತೇವೆ” ಎಂದು ಚಾಟ್ ಹೇಳಿದೆ.

ಪ್ರಕರಣದ ಹಿನ್ನೆಲೆ:

DMK ನಾಯಕ ಮತ್ತು ತಮಿಳುನಾಡಿನ ಮಾಜಿ ಉನ್ನತ ಶಿಕ್ಷಣ ಮಂತ್ರಿ ಕೆ. ಪೊನ್ಮುಡಿ, 2023ರಲ್ಲಿ ತಿರುವಣ್ಣಾಮಲೆಯಲ್ಲಿ ನಡೆದ ಒಂದು ಸಭೆಯಲ್ಲಿ ಹಿಂದೂ ಧರ್ಮ ಮತ್ತು ಬ್ರಾಹ್ಮಣರ ವಿರುದ್ಧ ಆಕ್ಷೇಪಾರ್ಹವಾದ ಟೀಕೆಗಳನ್ನು ಮಾಡಿದ್ದರು. ಈ ಮಾತುಗಳು ಸಾಮಾಜಿಕ ಮಾಧ್ಯಮಗಳಲ್ಲಿ ವೈರಲ್ ಆಗಿ, ಹಿಂದೂ ಸಂಘಟನೆಗಳು ಮತ್ತು ಸಮುದಾಯಗಳಿಂದ ತೀವ್ರ ವಿರೋಧ ಎದುರಿಸಿತ್ತು.

ಕೆಲವು ಸಂಘಟನೆಗಳು ಪೊನ್ಮುಡಿ ವಿರುದ್ಧ IPCನ ಸೆಕ್ಷನ್ 153A (ಸಾಮುದಾಯಿಕ ವೈಷಮ್ಯ ಬೆಳೆಸುವುದು), 295A (ಧಾರ್ಮಿಕ ಭಾವನೆಗಳನ್ನು ಗಾಯಪಡಿಸುವುದು) ಮತ್ತು 505(2) (ಸಾರ್ವಜನಿಕ ಶಾಂತಿ ಭಂಗದ ಭಯೋತ್ಪಾದನೆ)ಗಳಡಿಯಲ್ಲಿ ಪ್ರಕರಣ ದಾಖಲಿಸುವಂತೆ ಪೊಲೀಸರಿಗೆ ಫಿರ್ಯಾದಿ ನೀಡಿದ್ದವು. ಆದರೆ, ಪೊಲೀಸರು ಈ ಪ್ರಕರಣದಲ್ಲಿ ಯಾವುದೇ ಕ್ರಮ ತೆಗೆದುಕೊಳ್ಳದಿದ್ದುದರಿಂದ, ಹೈಕೋರ್ಟ್ನಲ್ಲಿ PIL (Public Interest Litigation) ದಾಖಲಾಗಿತ್ತು.

ಹೈಕೋರ್ಟ್ ಆದೇಶ:

ಮದ್ರಾಸ್ ಹೈಕೋರ್ಟ್ನ ಡಿವಿಜನ್ ಬೆಂಚ್, ನ್ಯಾಯಮೂರ್ತಿಗಳು ಎಸ್.ಎಸ್. ಸುಂದರ್ ಮತ್ತು ನ್ಯಾಯಮೂರ್ತಿ ಸುಂದರ್ ಮೋಹನ್ ಅವರಿಂದ ಕೂಡಿತ್ತು. ನ್ಯಾಯಾಲಯವು ಪೊಲೀಸರ ನಿಷ್ಕ್ರಿಯತೆಗೆ ಅಸಮಾಧಾನ ವ್ಯಕ್ತಪಡಿಸಿ, “ಈ ರೀತಿಯ ಪ್ರಕರಣಗಳನ್ನು ನೋಡಿಕೊಳ್ಳುವುದು ಪೊಲೀಸರ ಕರ್ತವ್ಯ. ಅವರು ಕ್ರಮ ತೆಗೆದುಕೊಳ್ಳದಿದ್ದರೆ, ನಾವೇ ಕ್ರಮ ತೆಗೆದುಕೊಳ್ಳುತ್ತೇವೆ” ಎಂದು ಹೇಳಿದೆ.

ನ್ಯಾಯಮೂರ್ತಿಗಳು “ಧಾರ್ಮಿಕ ಸಂವೇದನಶೀಲತೆಗೆ ಸಂಬಂಧಿಸಿದ ವಿಷಯಗಳು ದೇಶದ ಶಾಂತಿ ಮತ್ತು ಸಾಮರಸ್ಯಕ್ಕೆ ಬೆದರಿಕೆ ಹಾಕಬಹುದು. ಇಂತಹ ಪ್ರಕರಣಗಳನ್ನು ಗಂಭೀರವಾಗಿ ಪರಿಗಣಿಸಬೇಕು” ಎಂದು ಒತ್ತಿಹೇಳಿದರು.

ಮುಂದಿನ ಕ್ರಮ:

ಹೈಕೋರ್ಟ್ ತಿರುವಣ್ಣಾಮಲೆ ಪೊಲೀಸರಿಗೆ 4 ವಾರಗಳೊಳಗೆ ಪ್ರಕರಣದಲ್ಲಿ ಸೂಕ್ತ ಕ್ರಮ ತೆಗೆದುಕೊಂಡು, ವರದಿ ಸಲ್ಲಿಸುವಂತೆ ಆದೇಶಿಸಿದೆ. ಪೊನ್ಮುಡಿ ಅವರ ಮಾತುಗಳನ್ನು ಪರಿಶೀಲಿಸಿ, ಅದು ದ್ವೇಷ ಭಾಷಣದ ವ್ಯಾಖ್ಯೆಗೆ попадаетವೇ ಎಂದು ತನಿಖೆ ನಡೆಸಲಾಗುವುದು.

ಪ್ರತಿಕ್ರಿಯೆಗಳು:

  • DMK ಪಕ್ಷ: ಪೊನ್ಮುಡಿ ಅವರ ಮಾತುಗಳನ್ನು ಸಂದರ್ಭದಿಂದ ಹೊರತುಪಡಿಸಿ ವಿರೂಪಗೊಳಿಸಲಾಗಿದೆ ಎಂದು ಹೇಳಿದೆ.
  • BJP ಮತ್ತು ಹಿಂದೂ ಸಂಘಟನೆಗಳು: ಹೈಕೋರ್ಟ್ ನಿರ್ಣಯವನ್ನು ಸ್ವಾಗತಿಸಿದ್ದು, “ಧರ್ಮದ ವಿರುದ್ಧ ದ್ವೇಷ ಹರಡುವವರ ವಿರುದ್ಧ ಕಟ್ಟುನಿಟ್ಟಾದ ಕ್ರಮ ತೆಗೆದುಕೊಳ್ಳಬೇಕು” ಎಂದು ಒತ್ತಿಹೇಳಿವೆ.

ತೀರ್ಪಿನ ಪ್ರಾಮುಖ್ಯ:

ಈ ತೀರ್ಪು ಧಾರ್ಮಿಕ ಸಂವೇದನಶೀಲತೆ ಮತ್ತು ಹೇಟ್ ಸ್ಪೀಚ್ (ದ್ವೇಷ ಭಾಷಣ) ಕುರಿತಂತೆ ಕಾನೂನು ಕ್ರಮಗಳ ಬಗ್ಗೆ ಸ್ಪಷ್ಟ ಸಂದೇಶ ನೀಡುತ್ತದೆ. ರಾಜಕೀಯ ನಾಯಕರು ಮತ್ತು ಸಾರ್ವಜನಿಕ ವ್ಯಕ್ತಿಗಳು ಧರ್ಮ ಅಥವಾ ಸಮುದಾಯಗಳ ವಿರುದ್ಧ ಹುಟ್ಟುಹಾಕುವ ಮಾತುಗಳಿಗೆ ಜವಾಬ್ದಾರರಾಗಬೇಕು ಎಂಬುದನ್ನು ಇದು ಒತ್ತಿಹೇಳುತ್ತದೆ.

ಮುಂದಿನ ವಿಚಾರಣೆ: 4 ವಾರಗಳ ನಂತರ ಪೊಲೀಸರು ನ್ಯಾಯಾಲಯಕ್ಕೆ ವರದಿ ಸಲ್ಲಿಸಲಿದ್ದಾರೆ. ಪ್ರಕರಣದ ಪ್ರಗತಿಯನ್ನು ಹೈಕೋರ್ಟ್ ನಿಗಾವಹಿಸಲಿದೆ.

]]>
https://vsnewskannada.com/archives/43922/feed 0
ஏப்ரல் 18: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39க்கு விற்பனை https://vsnewskannada.com/archives/43918 https://vsnewskannada.com/archives/43918#respond Fri, 18 Apr 2025 01:49:38 +0000 https://www.vsnewskannada.com/?p=43918 சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

]]>
https://vsnewskannada.com/archives/43918/feed 0
குரோம்பேட்டையில் ரூ.110 கோடியில் கட்டப்படும் மாவட்ட மருத்துவமனையை விரைவில் திறக்க ஏற்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி https://vsnewskannada.com/archives/43914 https://vsnewskannada.com/archives/43914#respond Fri, 18 Apr 2025 01:47:14 +0000 https://www.vsnewskannada.com/?p=43914 சென்னை: குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே ரூ.110 கோடியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட மருத்துவமனை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது: பல்லாவரம் தொகுதி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை 1973ம் ஆண்டு 52 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் முதல்வர் கலைஞரால் தொடங்கப்பட்டது. இங்கு 3,000 புறநோயாளிகள் பயன்பெற்று வருகிறார்கள். அதன் அருகாமையில் தமிழ்நாடு முதல்வர் 110 கோடி ரூபாய் நிதி வழங்கி கட்டப்பட்டு வருகின்ற மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக எப்போது திறக்கப்படும்.

7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு தயார் நிலையில் இருக்கின்ற பல் மருத்துவமனை எப்போது திறக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் ரூ.1,018 கோடி செலவில் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் ரூ.110 கோடி செலவில் ஒரு பிரமாண்டமான மருத்துவமனை கட்டப்பட்டு, பணிகள் இறுதி நிலையில் இருக்கிறது. மிகவிரைவில் மருத்துவ உபகரணங்களும், மருத்துவப் பணியாளர்களும் அதில் அமைக்கப்பட்டதற்கு பிறகு முதல்வர் வாயிலாக அந்த மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது,’’ என்றார்.

 

]]>
https://vsnewskannada.com/archives/43914/feed 0
உயிரை பறிக்கும் அதிகாரத்தை யார் வழங்கியது? ‘என்கவுன்டர்’ பற்றி நீதிபதி சரமாரி கேள்வி! https://vsnewskannada.com/archives/43910 https://vsnewskannada.com/archives/43910#respond Fri, 18 Apr 2025 01:42:15 +0000 https://www.vsnewskannada.com/?p=43910 மதுரை : ‘பாதுகாப்பிற்காக தான் போலீசாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. உயிரை பறிக்கும் அதிகாரத்தை யார் வழங்கியது?’ என, ரவுடி வெள்ளை காளி சகோதரி தொடர்ந்த வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.

திருச்சி, குண்டூர் சத்தியஜோதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

என் சகோதரர் வெள்ளை காளி, 2019 முதல், சென்னை புழல் சிறையில் கைதியாக உள்ளார். மதுரையில் ரவுடி கிளாமர் காளி கொலை செய்யப்பட்டார்; அந்த வழக்கில் வெள்ளை காளியின் பெயரை சேர்த்தனர். இந்த கொலைக்கும், அவருக்கும் தொடர்பில்லை.

எதிர்தரப்பைச் சேர்ந்த வி.கே.குருசாமி, ஆளுங்கட்சியில் உள்ளார். இதனால் கிளாமர் காளி கொலை வழக்கில் கைதான எங்கள் உறவினர் சுபாஷ் சந்திரபோஸை, போலீசார் என்கவுன்டரில் கொன்றனர்.
சிறையிலிருந்து வெள்ளை காளியை போலீசார் விசாரணைக்கு அழைத்து வரும்போது, சட்டவிரோதமாக என்கவுன்டர் செய்ய வாய்ப்புள்ளது; அவரை பாதுகாக்க வேண்டும். சிறையிலிருந்தவாறே காணொலியில் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும்.

‘அவரை போலீஸ் காவலில் எடுக்கும் போது, அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்’ என, டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சத்தியஜோதி, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி பி.தனபால் விசாரித்தார். அரசு தரப்பு, ‘வெள்ளை காளி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் கிளாமர் காளி கொலை வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்கப்பட உள்ளார். என்கவுன்டர் செய்ய உள்ளதாகக் கூறுவது தவறானது’ என, தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி, ‘பாதுகாப்பிற்காக தான் போலீசாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக என்கவுன்டர்கள் அதிகரித்து வருகின்றன. குற்றவாளி தப்பி ஓடினால், முழங்காலுக்கு கீழே சுட்டுப் பிடிக்கலாம். திட்டமிட்டு ஒரு உயிரை பறிக்கும் அதிகாரத்தை யார் வழங்கியது? வேலியே பயிரை மேய்வதுபோல் உள்ளது. அனைத்து பிரச்னைகளுக்கும் என்கவுன்டர் தான் தீர்வா?’ என, கேள்வி எழுப்பினார். பின்னர், டி.ஜி.பி., மற்றும் மதுரை போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஏப்., 29க்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

]]>
https://vsnewskannada.com/archives/43910/feed 0
நுாறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டம் கோவை; விரைவில் அறிவிக்கப்படுகிறது https://vsnewskannada.com/archives/43906 https://vsnewskannada.com/archives/43906#respond Fri, 18 Apr 2025 01:38:19 +0000 https://www.vsnewskannada.com/?p=43906 கோவை : கோவை மாவட்டம், 100 சதவீத எழுத்தறிவித்தல் பெற்ற, மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மத்திய அரசின் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 15 வயதிற்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாத நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், இந்திய அரசு பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையுடன் இணைந்து, 2024-2025 கல்வியாண்டில்,கோவை மாவட்டத்தில் திட்டத்தின் முதல் கட்டமாக 20,199 நபர்களுக்கு எழுத்தறிவு பயிற்சி வழங்கி, அவர்களுக்கான தேர்வுகளும் முடிக்கப்பட்டன.
தற்போது, திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், பேரூர், பொள்ளாச்சி (வடக்கு மற்றும் தெற்கு), சர்க்கார்சாமக்குளம், சுல்தான்பேட்டை, சூலூர், தொண்டாமுத்தூர் மற்றும் வால்பாறை ஆகிய வட்டார மையங்களில் எழுத்தறிவு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், 1,782 ஆண்கள் மற்றும் 5,464 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 7,246 பேர் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படும்.இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த திட்டத்தின் கீழ் அதிகமான நபர்களுக்கு எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டது.

பொதுவாக, இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆனால், இந்த முறை, எழுதப் படிக்கத் தெரியாத அனைவரையும் கணக்கிட்டு, அவர்களுக்கு கல்வி வழங்க அறிவுறுத்தப்பட்டது.

கோவை ஒரு பெரிய மாவட்டம் என்பதால் இங்கு பயில்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.ஏற்கனவே, நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக அறிவிக்கப்படவுள்ளன. தற்போது கோவையில் பயில்பவர்கள் தேர்வை வெற்றிகரமாக முடித்தவுடன், வரும் நவம்பர் மாதத்திற்கு மேல், கோவையும் 100 சதவீத எழுத்தறிவை அடைந்த மாவட்டமாக அறிவிக்கப்படும்’ என தெரிவித்தனர்.

]]>
https://vsnewskannada.com/archives/43906/feed 0
தங்கக் கடத்தல் : ஐ.பி.எஸ் தந்தையின் செல்வாக்கை தவறாக பயன்படுத்திய ரன்யா ராவ்! https://vsnewskannada.com/archives/43558 https://vsnewskannada.com/archives/43558#respond Fri, 21 Mar 2025 09:33:25 +0000 https://www.vsnewskannada.com/?p=43558 Ranya Rao: பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில், ரன்யா ராவ் தனது மாற்றாந்தந்தை ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்பதால், விமான நிலைய புரோட்டோகால் சேவைகளை தவறாக பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு

பெங்களூரு மார்ச் 21: தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக ஐ.பி.எஸ் அதிகாரியின் விமான நிலைய புரோட்டோகால் சேவைகளை ரன்யா ராவ் தவறாக பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தங்கக் கடத்தல் வழக்கில், ரன்யா ராவ் என்ற பெண் தனது மாற்றாந்தந்தை ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்பதால், அவர் விமான நிலையத்தில் வழங்கப்பட்ட புரோட்டோகால் சேவைகளை தவறாக பயன்படுத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு செல்வாக்கு பயன்படுத்தப்படுவது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

விசாரணையில் அம்பலமான முறைகேடுகள்

ரன்யா ராவ், அடிக்கடி தனது மாற்றாந்தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி விமான நிலைய புரோட்டோகால் சேவைகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம், அவர் எந்தவிதமான சோதனைக்கும் உட்படாமல் விமான நிலையத்திற்குள் எளிதாக சென்று வந்துள்ளார். இந்த முறைகேடான அணுகலைப் பயன்படுத்தி, அவர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்று தீவிரமாக சந்தேகிக்கப்படுகிறது.

பொதுவாக, ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த புரோட்டோகால் சேவைகள் வழங்கப்படும். ஆனால், ரன்யா ராவ் தனது மாற்றாந்தந்தையின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இந்த சேவைகளை பெற்றது விசாரணையில் உறுதியாகி உள்ளது. இது அதிகார துஷ்பிரயோகத்திற்கு ஒரு முக்கிய உதாரணமாக பார்க்கப்படுகிறது.

தங்கக் கடத்தலின் பின்னணி மற்றும் தொடர் விசாரணை

இந்த தங்கக் கடத்தல் வழக்கு பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தலில் ரன்யா ராவுக்கு உதவியாக இருந்த விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம், உயர் அதிகாரிகளின் செல்வாக்கை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க, அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ரன்யா ராவ் தனியாக செயல்பட்டாரா, அல்லது பின்னணியில்别 குழு செயல்பட்டிருந்ததா என்பதையும், அவரது வளர்ப்பு தந்தை ராமச்சந்திர ராவுக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் கைது

கர்நாடக மாநில டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளான ரன்யா, தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசின் இணை முதன்மை செயலாளர் கவுரவ் குப்தா (IAS) தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ளார்.

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) நடத்திய அதிரடி சுற்றிவளைப்பில், ரன்யா ராவிடம் இருந்து 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.17.29 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாதுகாப்பு அதிகாரிகள் மீது சந்தேகம்

விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ரன்யா ராவுக்கு உதவியதாகவும், சோதனைகளில் இருந்து தப்பிக்கச் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், சில சந்தர்ப்பங்களில் போலீசார் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

செல்வாக்கு பயன்படுத்தப்படுவது குறித்து இந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

]]>
https://vsnewskannada.com/archives/43558/feed 0
Ajith : “குட் பேட் அக்லி டைட்டிலை சொன்னதே அஜித்தான்” – ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய தகவல்! https://vsnewskannada.com/archives/43555 https://vsnewskannada.com/archives/43555#respond Fri, 21 Mar 2025 09:31:57 +0000 https://www.vsnewskannada.com/?p=43555 Adhik Ravichandran : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் முன்னணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படமானது வரும் 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பை நடிகர் அஜித்தான் தேர்ந்தெடுத்தார் என இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோவாக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar) . இவரின் நடிப்பில் இறுதியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படமானது மக்களிடையே ஓரளவு வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த இப்படமானது ஹாலிவுட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்று கூறப்படும் நிலையில், மக்களிடையே அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தினை தொடர்ந்து அஜித் நடித்து வந்த திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly) . இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் (Adhik Ravichandra) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படமானது தற்போது ரிலீசிற்கு தயாராகியுள்ள நிலையில், ப்ரோமோஷன் வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இவர்களில் ஜோடி விடாமுயற்சி படத்திலே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த படத்திலும் பேமஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் சொன்ன விஷயமானது, தற்போது இணையதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அவர் ஒரு பேட்டியில், குட் பேட் அக்லி டைட்டில் தேர்வான விஷயத்தைப் பற்றித் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டைட்டிலை நடிகர் அஜித்தான் தேர்ந்தெடுத்தார் என அவர் கூறியுள்ளார். மேலும் இந்த தகவல்கள்குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

குட் பேட் அக்லி டைட்டிலை தேர்ந்தெடுக்கக் காரணம் :

சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் இப்படத்தின் டைட்டில் குறித்தான கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலைக் கூறிய இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் ” இந்த திரைப்படத்திற்கான குட் பேட் அக்லி டைட்டிலை நடிகர் அஜித்தான் செலெக்ட் செய்தார்” என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் அஜித் இந்த படத்தில் தீனா மற்றும் பில்லா போன்ற படங்களில் நடித்திருந்த கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித்தின் ரெட் டிராகன் என்ற பெயரானது அருமையாக இருக்கும்.

அஜித்தின் புதிய கெட்டப் மற்றும் கதாபாத்திரம்

மேலும் இந்த திரைப்படத்தில் பல எமோஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது, வரும் 2025 ஏப்ரல் மாதம் அஜித்தின் ரசிகர்களுக்கு விருந்துதான் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஒவ்வொரு சீனில் நடிகர் அஜித் வரும்போதும் எப்படி இருக்கும் என்று, எனது படக்குழுவினருடன் பேசும்போது காட்சிகள் கண்முன்னே வந்து செல்லும். மேலும் அந்த காட்சிகள் அனைத்தையும் திரையில் நாங்கள் கொண்டுவருவதற்கு பெரும் முயற்சி செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் நடிகர் அஜித் குமாரைப் போல , அதிகம் மன உறுதியுடைய நபரை எங்கேயும் பார்க்கமுடியாது என அவர் கூறியுள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

]]>
https://vsnewskannada.com/archives/43555/feed 0
நடுங்கிய மக்கள்.. பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை.. கரைக்குடியில் பகீர்! https://vsnewskannada.com/archives/43552 https://vsnewskannada.com/archives/43552#respond Fri, 21 Mar 2025 09:31:01 +0000 https://www.vsnewskannada.com/?p=43552 Karaikudi Murder : சிவகங்கை, மார்ச் 21: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நண்பர்களுடன் சென்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளனர்.காரைக்குடி, மார்ச் 21:  சிவகங்கை, மார்ச் 21: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நண்பர்களுடன் சென்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளனர். அப்போது, நண்பர்கள் இரண்டு பேருக்கு வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப  நாட்களில் தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பட்டப்பகலில் கொலை சம்பவங்கள் தினமும் நடந்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இந்த சூழலில், மீண்டும் தமிழகத்தில் ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. அதாவது, பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது. ]]> https://vsnewskannada.com/archives/43552/feed 0 TVK : மார்ச் 28-ல் தவெக பொதுக்குழு கூட்டம்.. தீவிர கள பணியில் நிர்வாகிகள்! https://vsnewskannada.com/archives/43549 https://vsnewskannada.com/archives/43549#respond Fri, 21 Mar 2025 09:30:02 +0000 https://www.vsnewskannada.com/?p=43549 TVK General Body Meeting | தமிழக வெற்றிக் கழகம் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், அதன் அடுத்த பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அது தொடர்பாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, மார்ச் 21 : தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகள் ராமச்சந்திரா கலையரங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மார்ச் 28, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் தவெக

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். கட்சி தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே அவர் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பொதுமக்களை சந்திப்பது, பொதுக்குழு கூட்டம், கட்சியை கட்டமைப்பது உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், விஜய் மேலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி என சிலர் விஜயின் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இவ்வாறு தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்து பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நிலையில், தவெகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தவெகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் – புஸ்ஸி ஆனந்த அறிவிப்பு

சென்னை, திருவான்மியூரில் ராமச்சந்திர கலையரங்கில் மார்ச் 28, 2025 அன்று காலை 9 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பு கடிதம் மற்றும் கட்சியின் அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

]]>
https://vsnewskannada.com/archives/43549/feed 0
நாடாளுமன்றத்தில் நமது குரல்கள் நசுக்கப்படும்.. தொகுதி மறு சீரமைப்பு குறித்து வீடியோ வெளியிட்ட முதல்வர்! https://vsnewskannada.com/archives/43546 https://vsnewskannada.com/archives/43546#respond Fri, 21 Mar 2025 09:29:09 +0000 https://www.vsnewskannada.com/?p=43546 CM MK Stalin on Delimitation | தொகுதி மறு சீரமைப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், திமுகவின் முன்னெடுப்பு குறித்தும் மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அவசியத்தையும் அவர் கூறியுள்ளார்.

சென்னை, மார்ச் 21 : சென்னையில் நாளை (மார்ச் 22, 2025) நடைபெற உள்ள தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், தொகுதி மறு சீரமைப்பு குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் முதலமைச்சர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட முதலமைச்சர்

தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறு சீரமைப்பு தான் தற்போது பேசுபொருளாக உள்ளது. 2026-ல் கண்டிப்பாக தொகுதி மறு சீரமைப்பு நடைபெறும். அப்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு நடைபெற்றால், நம் மாநிலத்தின் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும், இதை உணர்த்துவதற்காக தான் திமுக முதலில் குரல் எழுப்பியது என்று கூறியுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்ட வீடியோ

தொடர்ந்து பேசியுள்ள முதலமைச்சர், இது எம்.பி.க்கள் சார்ந்த பிரச்சனை மட்டும் கிடையாது. நம் மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை. அதனால் தான் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. பாஜக தவிர மற்ற அனைத்து கட்சியினரும் ஓரணியில் நின்று, நியாயமான தொகுதி மறு சீரமைப்பு வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினோம் என்று கூறியுள்ளார். தொகுதி மறு சீரமைப்பால் பாதிக்கப்பட உள்ள மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என்று ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநில முதலமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கும் அனைத்து கட்சியினருக்கும் தான் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நமது குரல் நசுக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த கூட்டம் எதற்காக நடத்தப்பட வேண்டும் என சிலர் கேட்கிறார்கள். தொகுதி மறு சீரமைப்பால் தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்கள் பாதிக்கப்பட்டால் இந்தியாவின் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது என்றும் ஜனநாயத்திற்கான மதிப்பு இல்லாமல் போய்விடும், நாடாளுமன்றத்தில் நமது குரல்கள் நசுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இது குறிப்பிட்ட மாநிலங்களை அவமதிக்கும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://vsnewskannada.com/archives/43546/feed 0